Skip to main content

அயல்நாட்டு அரசியல்வாதி இந்திய நாட்டு அரசியல்வாதியிடம் விமானத்தில் உரையாடல் காட்சி

அயல் நாட்டு அரசியல்வாதி-எங்க நாட்டிலே நாட்டின்மீது மிகுந்த பற்று கொண்ட நல்லமனிதர்கள் அவர்களது வேலைகேட்டும்,முன்னுரிமை கேட்டும் போராடுகிறார்கள்.அவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியலை.
 இந்திய அரசியல்வாதி-வே..இதுக்குப்போயி.....என்ன மனுசன்யா.. .நீ ..இதுக்கு ஆலோசனை சொல்லனுமுன்னா தமிழ்நாட்டிலேதான்யா தலிவரு பலரு இருக்காருங்க...திகார் ஜெயிலை நிரப்புறதில போட்டி மேலப் போட்டி போட்டு வெற்றிபெற்ற தனிப்பெரும் தன்னிகரில்லா தமிழ்நாட்டிலேதான் இதுக்கு விடை இருக்கு.
அயல்நாட்டு அரசியல்வாதி-எனக்கு சரியான திட்டம் சொன்னீங்க்ன்னா எங்க நாட்டிலே டாக்டர் பட்டம் உங்கக்குத் தரஏற்பாடு செய்வேன்.
இந்திய அரசியல்வாதி-தமிழ்நாட்டிலே சுதந்திரப்போராட்டத்தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அரசாணைப் போட்டாங்க.ஆனால் அந்த அரசாணைமூலம் ஒரு வாரிசுக்குக்கூட வேலை கிடைக்கக்கூடாது என்று மெல்லக்கொல்லும் ஒரு நிபந்தனைப் போட்டாங்க. அதாவது, முன்னுரிமையில் முதலாவது விதவைகள்,கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்கள், இவ்வாறு ஆறாவதாகக் கீழே உள்ள வரிசைக்குத் தள்ளப்பட்டனர்.மேலும் வாரிசு சான்றிதழை கூவிக் கூவி மற்றவர்களுக்குக் கொடுக்கும் தாசில்தார்களை தியாகி வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பிற்குச் சான்றிதழைக் கொடுக்காதே என்று வாய்மொழியாவும் சொல்லிப்புட்டாங்க. .இப்போ தியாகி வாரிசுங்க செத்துக்கிட்டு இருக்காங்க.எவ்வளவு பெரிய சதித்திட்டம்.....நாடு சுதந்திரம் பெறணும் என்று நாட்டு மக்களையே தன்னுடைய குடும்பமா நினைத்தவர்களுடைய மகன் ,மகள், பேரக்குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கவிடாத தந்திரம் எப்படி ..இதுக்கு மேல தியாகிகளின் பேரன் பேத்திகளுக்கு உயர் கல்வியிலே பி.இ.,எம்.பி.பி.எஸ் சிலே ஒன்றிரண்டு பேருக்கு இடம் தந்ததையும் கெடுத்திட்டாங்க தமிழ்நாட்டிலே.இதை உங்கள் நாட்டிலே செய்ங்க...........
அயல் நாட்டு அரசியல் வாதி-நாட்டுக்காகப்பாடுபட்ட குடும்பத்தை திட்டமிட்டு அழிக்கும் கேவலமான வேலையை எங்கநாட்டிலே நாங்க செய்யமாட்டோம்.உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

Popular posts from this blog

தியாகி பேரக்குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பிற்கானச் சான்றிதழ்-மாதிரி

FREEDOM FIGHTERS -SON-DAUGHTER and GRAND SON EMPLOYMENT RELATED CHENNAI HIGH COURT [MADURAI BENCH]ORDER

W.P[MD] NO 12215 of 2010

Thiyagi grandson Certificate model