Skip to main content

Posts

Showing posts from July, 2021

காமராஜர் பற்றிய அரிய தகவல்கள்

காமராஜர் பற்றிய நூற்றுக்கு மேற்பட்ட அரிய தகவல்கள்:  1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார். 4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்.. 5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள். 6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும். 7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்ல